Description
அலெக்ஸாந்தர் ஃபதேயெவ்வின் இந்த படைப்பு, ரஷ்யாவின் தூரகிழக்கு பிரதேசத்தை களமாகக்கொண்டு புரட்சிகர போல்ஷ்விக் படைக்குழுவினரின் கதைகளை விவரிக்கிறது. தலைமைத் துவத்தின் பண்பு, சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வு பற்றிய விசாரணை, பொது நலத்திற்கும் தன்னலத்திற்கும் இடையிலான அகப்போராட்டங்களே இந்நாவலின் உள்ளார்ந்த பேசு பொருள்கள். இதுவொரு தீவிர கொள்கை பற்றுடைய எழுத்தாளரின் படைப்பென்ற போதிலும், 19 நூற்றாண்டு ரஷ்ய இலக்கிய மரபுகள் மீதான படைப்பாளியின் பற்றார்வத்தை வெளிச்சமிட்டு காட்டுவதாக அமைந்திருப்பது இந்த நாவலின் சிறப்பு.

Reviews
There are no reviews yet.