Description
வளர்ந்து வரும் இச்சமூகத்தில் காதல், சாதி கடந்த திருமணங்கள் இயல்பானதாக மாறி வருகிறது. ஆனால் பெற்றோர்களோ பெற்ற பிள்ளையையும் காதலித்த தலித் இளைஞரையும் எரித்துக் கொல்லும் கொடூர மனநிலை என்பது இச்சமூகத்தின் கோர முகத்தையே காட்டுகிறது.
இதற்கு துணை போகிறது காவல்துறை. சாதியவாதிகள் மதவாதிகள் ஆணவக் கொலையை அரசியலாக்குவதும் ஆபத்தாக மாறியிருக்கிறது.
அண்மைக் காலமாக நடக்கும் சாதி ஆணவக்கொலைக் குற்றங்கள் ஒரே சாதிக்குள்ளும் நடக்கத் தொடங்கியுள்ளன. ஆக இது தலித் மக்கள் சிக்கல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சிக்கல். இதனை எவ்வாறு முறியடிக்கப் போகிறோம்? என்ற கேள்வியே நம் அனைவரின் முன் நிற்கிறது.

Reviews
There are no reviews yet.