Description
சினிமா பிண்னணியில் எழுதப்பட்டிருக்கும் கதை என்றாலும் ஆங்காங்கே உண்மை சம்பவங்களைத் தொட்டிருக்கிறேன். உதவி இயக்குரர் ஒருவருக்கும். புது கதாநாயகிக்கும். பூக்கும் காதல், காதலுக்கு இடையூறு செய்யும் அரசியல்வாதி, கதாநாயகனின் நயவஞ்சகத் துரோகம், இறுதியில் அரசியல்வாதியின் பரிதாப என இந்தப் புதினத்தை ‘திரில்லர்” கதையாக்கி சஸ்பென்ஸையும் வாசகர்களுக்கு போனஸாக அளித்துள்ளேன். குண்டு வைத்துக் கொல்லப்படும் அரசியல்வாதியை கொன்றது யார்? சூது அறியாத காதல் வென்றதா? அல்லது சூழ்ச்சி வென்றதா? போன்றதொரு ‘கிளைமாக்ஸையும் நாவலுக்குள் நுழைந்தால் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது குறிப்பாக மையக் கதாபாத்திரமான உதவிஇயக்குநர், எதிர்காலத்தைக் கருத்தில் παντικάσι முழுநேரமும் ஒரு இயக்குநருக்கு விசுவாசமாகவும் தொழிலில் பக்தியுடனும் இருக்கிறார். ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கதாநாயகி மயங்காமல் பணத்திற்கும், புகழுக்கும் பாசத்திற்குக் கட்டுப்பட்டவளாக இருக்கிறாள். மற்றொரு கதாபாத்திரமான அரசியல்வாதி, மக்கள் பிரதிநிதியாகச் செயல்படாமல் சுகபோக வாழ்க்கையில் திளைக்கிறார். அதற்கான தண்டனையையும் அவர் பெறுகிறார். இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் இன்றைய யதார்த்த நிலையைப் பேசுகின்றன. நேரில் *அமர்ந்து கதை சொல்வது போல இந்த நாவல் எழுதப்பட்டிருப்பது மிகச் சிறப்பு.
நடிகர் பரணி

Reviews
There are no reviews yet.